மத்திய அமைச்சர்: ஜல்லிக்கட்டு பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படும்
Jan 20, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிரமாக நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்திற்கான அவசர சட்டத்தை தயாரித்தது தமிழக அரசு. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல், சட்டத்துறை அமைச்சகம் இதனை பரிசீலனை செய்தது. இன்று அல்லது நாளைக்குள் ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில்மாதவ் தாவே கூறியுள்ளார்.
இதையடுத்து அதிமுக எம்.பி-க்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து வரைவு அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஆளுநர் அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார். அதன் பின் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அமைச்சர்: ஜல்லிக்கட்டு பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படும்”