செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அமைச்சர்: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லைMay 22, 2017

சென்ற ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் 40 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

siragu-karnataka-farmer

போராட்டம் நடத்திய விவசாயிகளை மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, தங்களது போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்பினர் விவசாயிகள்.

இந்நிலையில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்றும் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியுள்ளார். இடுபொருட்களின் விலையை குறைப்பது, அவர்களுக்கு பொருட்களுக்கான சந்தையை உருவாக்கிக் கொடுப்பது உள்ளிட்டவைதான் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று அவர் கூறியுள்ளார். இவரது பேச்சால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அமைச்சர்: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை”

அதிகம் படித்தது