மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: ஏப்ரல் 1 முதல் புதிய வட்டி விகிதம்Mar 31, 2017

மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் புதிய வட்டி விகிதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் காலாண்டு காலத்திற்கு (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

Siragu interest

இந்த புதிய விதிமுறைப்படி பி.பி.எப் மற்றும் ஐந்தாண்டு தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி 8லிருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தில் உள்ள 8.5 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைத்துள்ளது.

கிசான் விகாஸ் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும், ஐந்தாண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.4 சதவீதமாகவும், சேமிப்பு டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடர்கிறது.

சிறுசேமிப்புக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அரசின் முடிவுப்படி மாற்றியமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வங்கிகள் டெபாசிட்டுகள் மீதான வட்டிவிகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: ஏப்ரல் 1 முதல் புதிய வட்டி விகிதம்”

அதிகம் படித்தது