மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு விசாரணை



Mar 14, 2017

இன்று நடைபெற்ற லோக்சபாவில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை தேவை என்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசி ஆதரவு எம்.பி-க்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு அமளி ஏற்பட்டது.

siragu-jayalalitha

ஜெயலலிதா மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களாக யாரையும் அனுமதிக்கவில்லை. நீர்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவித்தனர்.

எனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு நீதி விசாரணை தேவை என்றும் நாமக்கல் எம்.பி சுந்தரம் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் அறிக்கை கிடைத்த பின் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு விசாரணை”

அதிகம் படித்தது