மத்திய அரசு: பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது
Jan 25, 2017
2017ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்காக 1730 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் 150 பேர் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டது.
இதில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் சாதனையாளர் சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், வட்டு எரியும் வீரர் விகாஸ் கவுடா, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி போன்றோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது தமிழகத்துக்கு கிடைத்த விருது, வெளியில் தெரியாத வீரர்களுக்கு இவ்விருது ஒரு உத்வேகமாக அமையும். விருது கிடைத்ததற்காக தமிழக மக்களுக்கும், மத்திய-மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது”