சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மன்னிப்பு!! (கவிதை)

குமரகுரு அன்பு

Jan 7, 2023
siragu mannippu
என்றோ ஒரு நாள்
எதோ ஒரு தருணத்தில்
எனக்கேத் தெரியாமல்
விதைத்திருக்கிறேன் ஒரே ஒரு சொல்லை!!
எங்கெங்கோ சுழன்று
எப்படியெப்படியோ உருண்டு புரண்டு
இதோ இப்போது ஒரு பெரிய தடை முன் வந்து நிற்கிறேன்.
அதுவும் அதே சொல்!!
பொருள் மாறாத சொற்களைப் பிடுங்கும்
பல் கொண்ட இடுக்கி
மன்னிப்பு!!
காலத்தால் கேட்கப்படும் மன்னிப்பை விட
காலம் தாழ்ந்து பிடுங்க முடியா நிலையில் கிடக்கு சொல்லின் முன் கேட்கப்படும் மன்னிப்பு பொருளற்றது.

குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மன்னிப்பு!! (கவிதை)”

அதிகம் படித்தது