நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள்

தேமொழி

Jul 23, 2016

கிரீன் பீஸ் (Greenpeace) பசுமைப் போராளிகள் தலைமையகத்திற்கும், உலக ஐக்கியநாடுகளின் சபைக்கும், உலக நாடுகளின் அரசாங்கங்களின் கவனத்திற்கும் ….

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை திட்டத்தின் குறிக்கோளின் படி, வளரும் மக்கட்தொகையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் உலகளாவிய முறையில் உணவு, தீனி, தீவனங்கள் உற்பத்தியின் அளவு வரும் 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் இருமடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Siragu marabanu maatram article1

கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள் தலைமையின்கீழ் நவீன வேளாண்முறைகளை எதிர்க்கும் அமைப்புகள், தொடர்ந்து இந்த உண்மைகளை மறுத்து வருவதுடன், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் புதுமைகளைப் புகுத்தும் செம்மை வேளாண் முறைகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் நவீன உயிரியல் தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படும் செம்மை வேளாண் முறைகளின் பயன்,ஆபத்து, தாக்கம் ஆகியன பற்றிய தவறானக் கருத்துக்களைப் பரப்புவதுடன், அனுமதிக்கப்பட்ட கள சோதனை முறைகள், வேளாண் ஆய்வுத் திட்டங்களைத் தடைசெய்து குலைக்கும் குற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Golden Rice grain in screenhouse of Golden Rice plants.

உலகம் முழுவதும் இயங்கும் கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளுக்கும், அவர்களது ஆதரவாளர்கள் அமைப்பிற்கும் எங்களது வேண்டுகோள்.உயர் தொழில் நுட்ப உயிரியல் அடிப்படையில் நவீன வேளாண்மையை மேற்கொள்ளும் உழவர்களையும், அதனால் பெறப்பட்ட உணவை நுகர்வோரின் அனுபவங்களையும் கேட்டு உங்களுடைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அறிவியல் அறிஞர்கள் குழு தரும் சான்றுகளுடன் கூடிய தகவலையும், வேளாண்மையை கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளையும் அறிந்து அங்கீகரிக்கும்படியும், பொதுவாக மரபணு மாற்றம் செய்த உணவை எதிர்ப்பதையும்,குறிப்பாக ‘கோல்டன் ரைஸ்’ (Golden Rice) திட்டத்தை எதிர்ப்பதையும் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உலகம் முழுவதுமுள்ள அறிவியல் அமைப்புகளும், வேளாண்மை கட்டுப்பாடு நிறுவனங்களும் தொடர்ந்து, எந்த மாறுதலுமின்றி உயிரியல் தொழில்நுட்ப அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் உணவை உண்பது பாதுகாப்பானது என்றும், பிற பயிரிடும் முறைகளில் விளைவித்த உணவுடன் ஒப்பிடும்பொழுதும், அவற்றைவிடவும் பாதுகாப்பான உணவே இவை என்றுதான் கூறி வருகின்றனர். இவற்றை உண்டதால் எதிர்விளைவை உருவாக்கியதாகவும், உடல் நலத்தைப் பாதித்ததாகவும் இவற்றை உண்ட மனிதர்களிடமோ, விலங்குகளிடமோ கண்டதாக இதுநாள்வரை ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்டசெய்தி கூடக் கிடைத்ததில்லை. இவற்றால் சுற்றுச்சூழலின் மீது ஏற்படும் சேதங்களும் குறைவென்றே மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உலகத்தில் பலவகை உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதனை வரமாகவும் கருதலாம்.

Siragu-marabanu-maatram-article6

கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள் ‘கோல்டன் ரைஸ்’ திட்டத்தின் எதிர்ப்பை முன்னெடுத்துள்ளார்கள். உயிர்ச்சத்து A குறைபாடு (vitamin A deficiency-VAD), குறைபாட்டின் விளைவாக ஏற்படும் நோய்களையும், இறப்புகளையும் குறைக்கவும், அறவே ஒழிக்கும் திறனையும் கொண்டது ‘கோல்டன் ரைஸ்’ திட்டம். ‘கோல்டன் ரைஸ்’ உற்பத்தியால் வறுமையில் உழலும் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய மக்களும் இதனால் நல்ல பயனடைய முடியும்.

Siragu-marabanu-maatram-article8உலக சுகாதார நிறுவனம் உலகில் 250 மில்லியன் மக்கள் உயிர்ச்சத்து A குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கிறது. இவர்களில் 40 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வசிக்கும் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (The United Nations Children’s Fund -UNICEF) தரும் புள்ளிவிவரங்களின் படி, ஒவ்வொரு ஆண்டும் தடுக்கப்படக்கூடிய இந்த உயிர்ச்சத்து A குறைபாட்டால் ஏற்படும் நோய்க்கு ஒன்றிலிருந்து இரண்டு மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள் எனத் தெரிகிறது. உயிர்ச்சத்துக் குறைவின் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்து குழந்தைகளும் சிறுவயதினரும் இந்த ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். உலக அளவில், குழந்தைகள் பார்வையை இழப்பதற்கு முதன்மைக் காரணமாக இருக்கும் உயிர்ச்சத்து A குறைபாட்டினால் ஆண்டுதோறும் 250,000 – 500,000 குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பாதி பேர் பார்வையை இழந்து 12 மாதங்களுக்குள் இறந்துவிடுகிறார்கள்.

குறிப்பாக, ‘கோல்டன் ரைஸ்’திட்டத்திற்கான எதிர்ப்பைக் கைவிடும்படியும்; பொதுவாக, உயிரியல் உயர் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்ட பயிர்களையும் உணவுகளையும் எதிர்ப்பதைத் தவிர்க்கும்படியும், கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளின் ‘கோல்டன் ரைஸ்’ திட்டத்திற்கான எதிர்ப்பைப் புறக்கணிக்கும் படியும்; பொதுவாக, உயிரியல் உயர் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுகள் மீது அவர்கள் காட்டும் எதிர்ப்பைப் புறக்கணிக்கும் படியும்; தங்களுக்குள்ள அதிகாரத்தின் மூலம்கிரீன் பீஸ் பசுமைப் போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும்படியும்; உழவர்களுக்கு நவீன உயிரியல் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளில் உதவுவதை அதிகரிக்கும்படியும்; குறிப்பாக நவீன உயிரியல் உயர் தொழில்நுட்பமுறையில் மேம்படுத்தப்பட்ட விதைகளை வழங்குமாறும் உலக நாடுகளின் அரசாங்கங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அறிவியல் ஆய்வு முடிவுகளுடன் முரண்பட்டுக் கூறப்படும் கருத்துகள், உணர்வின் அடிப்படையிலும், வீம்பான பிடிவாதத்தினாலும் எழுப்பப்படும் கருத்துகள் தடைசெய்யப்பட வேண்டும்.

‘மனித இனத்திற்கு எதிரான குற்றம்’ என நாம் இதனைக் கருதுவதற்கு முன்னர் எத்தனை ஏழை மக்கள் இறக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உண்மையுள்ள,

செம்மை வேளாண் முறைகளுக்கும்,

மரபணு மாற்றம் செய்த உணவுக்கும்

ஆதரவாளர்களான நோபல் பரிசு பெற்ற

110அறிஞர்களின் கையொப்பம்.

http://supportprecisionagriculture. org/view-signatures_rjr. html

http://supportprecisionagriculture. org/nobel-laureate-gmo-letter_rjr. html

கடந்த 50 ஆண்டுகளாக (1962 முதல் சென்ற ஆண்டு வரை) நோபல் பரிசு அளித்துப் பாராட்டப்பட்ட 110 அறிஞர்கள் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். இவர்களில் மருத்துவம் (37%), வேதியியல் (31%), இயற்பியல் (23%), பொருளியல் (7%), இலக்கியம் (1%), அமைதி (1%) துறைகளைச் சார்ந்த அறிஞர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: மரபணு மாற்றம் செய்த உணவுகளை எதிர்க்கும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவிக்கும் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களின் இக்கடிதம் ஜெர்மன், துருக்கி, ஸ்பானிஷ், சீனமற்றும் பிரஞ்சு மொழி பெயர்ப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் supportprecisionagriculture. org (http://supportprecisionagriculture. org/nobel-laureate-gmo-letter_rjr. html) என்ற செம்மை வேளாண்மையை ஆதரிக்கும் குழுவினரின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் அறிஞர்களின் கோணத்தை முன்வைக்கும் நோக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள முயற்சி இது.

________________________________________

From News Media

Washington Post -

107 Nobel laureates sign letter blasting Greenpeace over GMOs

https://www. washingtonpost. com/news/speaking-of-science/wp/2016/06/29/more-than-100-nobel-laureates-take-on-greenpeace-over-gmo-stance/

New York Times -

Stop Bashing G. M. O. Foods, More Than 100 Nobel Laureates Say

http://www. nytimes. com/2016/07/01/us/stop-bashing-gmo-foods-more-than-100-nobel-laureates-say. html

Forbes -

Nobel Laureates Line Up To Support GMOs And Push Back Greenpeace

http://www. forbes. com/sites/curtissilver/2016/07/04/nobel-laureates-line-up-to-support-gmos-and-push-back-greenpeace/#671eda5d631e


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள்”

அதிகம் படித்தது