சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மறு உத்தரவு வரும் வரை காவிரியில் 2000கனஅடி தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவுOct 18, 2016

காவிரியில் வினாடிக்கு 2000கனஅடி தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

siragu-image3

தமிழக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிய வழக்கில் கர்நாடக மற்றும் தமிழகத்தின் அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய மத்திய நீர்வளத்துறை கமிஷன் தலைவர், சி.எஸ்.ஷா தலைமையில் குழுவை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இக்குழுவின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நாளையும் இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றது நீதிமன்றம். மறு உத்தரவு வரும் வரை காவிரியில் வினாடிக்கு 2000கனஅடி தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மறு உத்தரவு வரும் வரை காவிரியில் 2000கனஅடி தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு”

அதிகம் படித்தது