நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு புகார் குறித்து விவாதிக்க நாளை(12.05.17) அனைத்துக்கட்சி கூட்டம்May 11, 2017

அண்மைகாலமாக இந்தியாவில் நடக்கும் தேர்தல் மின்னனு ஓட்டு எந்திரங்கள் மூலம் நடத்தப்படுகிறது. மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை, தேர்தல் முடிவையே மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

Siragu vote1

இதனால் பழைய முறையான வாக்குச் சீட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் மனு அளித்துள்ளனர் அரசியல் கட்சியினர்.

இது குறித்து விவாதிக்க நாளை(12.05.17) டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அழைப்பு விடுத்துள்ளது தேர்தல் கமிஷன். இக்கூட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதால், இரண்டு அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு புகார் குறித்து விவாதிக்க நாளை(12.05.17) அனைத்துக்கட்சி கூட்டம்”

அதிகம் படித்தது