ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மின்புத்தகங்களை எப்படி வெளியிடுவது, விற்பது?

சௌமியன் தர்மலிங்கம்

Jun 11, 2016

Siragu ebook article3தமிழ் இலக்கிய உலகில் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் வெளியிடப்படுகின்றன. புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக்கடைகள், நூலகங்கள் போன்றவற்றின் வாயிலாக அவை மக்களை சென்று சேருகின்றன. ஆனால் இன்றைய மின்னணு உலகில் நூல்களை வாசிப்பதைக் காட்டிலும், மின் நூல்களை வாசிப்பது எளிமையாக தோன்றுகிறது. அலைபேசிகள், சிறிய கணிணிகள் துணைகொண்டு மின் நூல்களை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கும் வசதி உள்ளது. வரும் காலத்தில் அதிகப்படியாக மின்நூல்கள் மக்களை சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மின்நூல்களாக வெளியிடப்பட்டால் அவை அழிவது பெரிதும் தடுக்கப்படுகிறது. அச்சு நூல்கள் பத்தாண்டுகள் வரை தாக்குப்பிடிப்பதே மிக சிரமம். பாதுகாத்து வைத்திருந்தால் மட்டுமே ஓரளவு சாத்தியமாகும். மின்நூல்களில் அழிவு என்பது மிகவும் குறைவு, சேமித்து வைப்பதும் எளிதாக இருக்கும். ஒருமுறை ஆக்கச்செலவுகள் செய்தால் பிறகு தேவையான மாற்றங்கள் மட்டும் செய்துகொள்ளலாம்.

மின்நூல்களை உருவாக்குவதற்கு ஏராளமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அத்தகைய நிறுவனங்களிடம் ஆசிரியர்கள் நூல்களைக் கொடுத்தால் அவற்றை சரியான வடிவத்தில் மாற்றிக்கொடுத்துவிடுவார்கள். மாற்றப்பட்ட மின்நூல்களை விற்க ஏராளமான வழிகள் இருக்கின்றன.

Siragu ebook article4முக்கியமாக கூகுள் நிறுவனம் மின்நூல்களை விற்பதற்கு நல்ல வழிவகைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு சுட்டிகளையும் சொடுக்கி விரிவாக ஆய்வு செய்தால் நூல்களை எப்படி விற்பது, சில பகுதிகளை இலவசமாக வாசிக்க அளிப்பது என்பன போன்ற வேலைகளை செய்வது எப்படி என்பது தெரியும்.

https://books.google.com

https://play.google.com

இந்த முறையில் நன்மைகள் என்னவென்றால் நூல்களை இணைய வசதி உள்ள கணிணிகள் மற்றும் அலைபேசிகளில் வாசிக்க முடியும். தானாகவே நூல்கள் அலைபேசிகளில் தரவிறக்கம் ஆகிவிடும். ஆகவே வாசகர்கள் இரண்டு சாதனங்கள் வழியாகவும் நூல்களை வாசிக்க முடியும். மேலும் நூல்கள் பிறரால் களவாடப்பட முடியாது. யார் வாங்கியுள்ளாரோ அவரே நூல்களை வாசிக்க இயலும். நூலின் காப்புரிமையும் பாதுகாக்கப்படும்.

Siragu ebook article2நூலின் ஆசிரியர்கள் நூல்களை விற்பதற்கு அவற்றை மின்நூல்களாக மாற்றி இந்த இணையதளத்தில் ஏற்றி விட வேண்டும். நூலின் விலையை நிர்ணயித்து அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் நூலின் சில பகுதிகளை இலவசமாக வாசகர்கள் படிக்கும்படி அளிக்க வேண்டும்.

இவ்வாறு இவ்வசதியை பயன்படுத்தி ஆசிரியர்கள் தமது நூலை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கமுடியும். மின்நூல்களாக மாற்றப்படுவதால் நூல் அழியும் பிரச்சனையும் இல்லை. மேலும் நூல் களவாடப்படுவதோ, உரிமை பாதிக்கப்படுவதோ நிகழாது. எனவே மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தமிழ் உலகமும் மின் நூல்களை உருவாக்கி விற்பனை செய்து பயன்படுத்தி நன்மை பெற வேண்டும்.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மின்புத்தகங்களை எப்படி வெளியிடுவது, விற்பது?”

அதிகம் படித்தது