மீண்டும் காஷ்மீர் பள்ளிக்கு பயங்கரவாதிகள் தீ வைத்துள்ளனர்
Nov 5, 2016
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது தீ வைத்து வருகின்றனர். இதுவரை 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அதனால் காஷ்மீர் எல்லைப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை காஷ்மீரின் பந்திபூரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீ வைத்துள்ளனர். இத்தீயை அப்பகுதி மக்களும், தீயணைப்புப் படையினரும் அணைத்தனர்.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்துவருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் காஷ்மீர் பள்ளிக்கு பயங்கரவாதிகள் தீ வைத்துள்ளனர்”