ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வரிடம் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்: விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும்May 10, 2017

சென்ற வருடம் பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்க்கடன்களை செலுத்த முடியாமல் நானூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Siragu farmers

எனவே பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாற்பது நாட்களாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து தமிழக முதல்வர், டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்த பின் அப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று(10.05.17) அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்தனர். அந்த சந்திப்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் வரும் 21ம் தேதி விவசாயிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வரிடம் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்: விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும்”

அதிகம் படித்தது