மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் அறிவிப்பு: கடலில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்Feb 24, 2017

கடந்த ஜனவரி 27ம் தேதி சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், மும்பையிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி வந்த கப்பல் மீது ஈரான்கப்பல் மோதியது. இதனால் மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்தகப்பல் சேதமடைந்தது.

Siragu oil

அக்கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் பரவியது. சென்னை எண்ணூரிலிருந்துமகாபலிபுரம் வரை உள்ள கடற்பரப்பு மாசடைந்தது. இதனால் மீன்பிடித்தொழில்பாதிக்கப்பட்டது.

நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர் மீனவர்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்த இடைக்கால நிவாரணத்திற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் என்று முறையில் பாதிக்கப்பட்ட முப்பதாயிரம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர். மேலும் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன் சந்தைகள் ரூ. 75 லட்சம் செலவில் அமைத்துத் தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் அறிவிப்பு: கடலில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்”

அதிகம் படித்தது