ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்Dec 10, 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அன்று இரவு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவரது தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

siragu-panneerselvam

இதையடுத்து புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின் மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்கள் தங்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மீண்டும் மதியம் 1.15 மணியளவில் அமைச்சரவை கூடி நடந்து வருகிறது. இதில் பல்வேறு முடிவுகள் எடுப்பதாக தெரிய வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்”

அதிகம் படித்தது