முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசுவதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் அப்பல்லோ அறிவிப்பு
Oct 21, 2016
முதல்வர் ஜெயலலிதா சென்ற மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடாத அப்பல்லோ இன்று 10வது அறிக்கையை வெளியிட்டது.
இன்று முதல்வர் பேசியதாகவும், உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாள்முதல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டது அப்பல்லோ. இன்று வெளியான முதல்வரது அறிக்கை அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசுவதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் அப்பல்லோ அறிவிப்பு”