முதல்வர் பன்னீர்செல்வம்: பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது வழக்கு தொடரப்படும்
Jan 31, 2017
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்து வருகிறது கேரள அரசு. மன்னார்காடு தாலுகாவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் பவானி ஆற்றில் நீரை தேக்கி வைக்க முயற்சித்து வருகிறது.
இதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டு குழுவிடம் மனுதாக்கல் செய்தது கேரள அரசு.
பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பனைகளைக் கட்ட இக்குழு அனுமதி அளித்தது. இந்த அனுமதி சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ல் அளித்தது.
இன்றைய சட்டசபையில் இப்பிரச்சினை குறித்து விவாதம் செய்யப்பட்டது. அதற்கு தடுப்பணைகள் கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது இன்னும் இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் பன்னீர்செல்வம்: பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது வழக்கு தொடரப்படும்”