முதல்வர் பன்னீர்செல்வம்: நடுக்குப்பம் பகுதியில் நிரந்தர மீன்சந்தை
Jan 31, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் முடிவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் காயமடைந்தனர். இந்த வன்முறையில் வாகனங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை நடுக்குப்பம் பகுதியில் உள்ள குடிசைகள் மற்றும் மீன்சந்தை தீக்கிரையாக்கப்பட்டன. அதனால் மீனவர்கள் மீன் சந்தை அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் 110விதியின் கீழ் அறிக்கை வாசித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை அமைத்துத்தரப்படும் என்றும் கூறினார். மேலும் எழுபது லட்சம் செலவில் நிரந்தரமான மீன் சந்தையை நடுக்குப்பத்தில் அமைத்துத்தரப்படும் என்று கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் பன்னீர்செல்வம்: நடுக்குப்பம் பகுதியில் நிரந்தர மீன்சந்தை”