சனவரி 18, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-6

கி.ஆறுமுகம்

Sep 12, 2015

puli thevar9பாண்டிச்சேரியை விட்டு வெளியேறும் மருதநாயகம், தஞ்சை மண்ணில் தஞ்சம் அடைகிறார். அங்கு அவர் தஞ்சாவூர் மன்னனின் படைப்பிரிவில் காலாட்படையில் ஒரு சிப்பாயாக தனது பணியைத் தொடங்குகிறார். அங்கு சிறந்த முறையில் பணிசெய்து தஞ்சையிலிருந்து தற்போது, ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கு இவர் அனுப்பப்படுகிறார். அங்கு இராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார். அங்கு முகமது கமல் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இவரின் கீழ் மருதநாயகம் அவரது பணியை செய்து கொண்டிருக்கிறார். மருதநாயகத்திற்கு அங்கு தண்டலகர் (Thandalgar), வரி வசூல் (Tax Collector), (Havidar) இந்தப்பெயர்கள்அந்தக்காலகட்டத்தில்வரிவசூல்செய்பவர்களைக்குறிக்கும். வரிவசூல்செய்பவராகமருதநாயகம்பணிசெய்துகொண்டிருக்கும்போதுஆற்காடுநவாப்புடன்நட்புகொள்ளும்சந்தர்ப்பம்அமைகிறது. ஆங்கிலேயர்களினால்மருதநாயகம்சுபேதார் (Subeder) என்ற பட்டம் பெற்று வரி வசூல் செய்கிறார்.

நெல்லூரில் ஒரு சிறு இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் மருதநாயகம் அமர்த்தப்படுகிறார். இந்த இராணுவம் ஆற்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆற்காடு நவாப்பிற்கு போரில் உதவ வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் மருதநாயகம் பணியில் இருந்தார். ஆற்காட்டில் நவாப் பட்டம் பெறுவதற்காக ஏற்பட்ட வாரிசு போரில், மருதநாயகமும் நவாப்புக்கு ஆதரவாகக் கலந்து கொண்டு, தனது சிறு இராணுவத்தினைக் கொண்டு போரில் கலந்து கொள்கிறார். இந்த கர்நாடக போர்தான் மருதநாயகத்தின் இராணுவ வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது எனக் கூறலாம். இதன் மூலம் ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் நன்மதிப்பை அடைகிறார் மருதநாயகம்.

இந்த கர்நாடகப் போரில்கூட மருதநாயகம் வெள்ளையனின் தலைமையின் கீழ்தான், Stringer Lawrence என்பவரின் கீழ்தான் போரில் கலந்து கொண்டார் மருதநாயகம். இவரின் போர் பயிற்சிகள், போர் முறைகள் அனைத்தும் ஐரோப்பியர்களின் போர் முறையினைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. இவருக்குப் போர் பயிற்சி அளித்தவர்கள் அனைவரும் ஐரோப்பியர்களாக இருந்தனர். இவரின் இராணுவத்தினை செயல்படுத்தும் வீதம், வீரர்களை கட்டுக்கோப்புடன் செயல்பட வைப்பது, வீரர்களுக்கு கட்டளையிடும் செயல் போன்றவை திறமைகளை கவனித்து, சென்னை ஆளுநர் George Pigot என்பவர் மருத நாயகத்தினை பெரிதும் ஆதரித்த வெள்ளையன் ஆவார். இவரின் ஆதரவின் மூலம் இவர் Commandant of company’s sepoy’s என்ற உயர்வை அடைந்தார். பின்னர் 1760-ல் இவர் zenith என்ற ‘all-conquering’ military commandant உயரிய நிலையை அடைந்தார்.

மருதநாயகத்தினைப் பற்றி 50 ஆண்டுகளுக்குப் பிறகு john maccodm என்பவர் கூறுகையில், “இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த துணிச்சலான வீரர், இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை” என்று புகழாரம் சூட்டுகிறார். இவரின் இறப்புக்குப் பின் ஆங்கிலேயர்கள், “எங்களின் போர் முறைகளைக் கற்றுக் கொண்டு அதில் மிகச் சிறந்த வீரர்களாக திகழ்ந்தவர்கள் இருவர், மருதநாயகம் மற்றும் மைசூர் ஹதர் அலி இவர்கள் தான் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடகப் போருக்குப் பிறகு, தென் தமிழகத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றிருந்ததில், அவர்கள் வரி வசூல் செய்யத் தொடங்கும் போது அவர்களுக்கு, வரி செலுத்த மறுத்தவர்களை போரில் வெற்றிகொள்ள வந்த ஆற்காடு நவாப்பின் படையை தலைமை ஏற்று வந்த ஆற்காடு நவாப்பின் சகோதரனுக்கு, பாதுகாவலாக, 1755-ல் பாளையக்காரர்களை எதிர்த்து போரில் மருதநாயகம் கலந்து கொண்டார் இந்தப் போரில் வெள்ளையரின் படைகளுக்கு தலைமை ஏற்று வந்தவர் கர்னல் ஹரான் (Heron) என்பவர்.

இந்தப் பாளையக்காரர்களில் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் தலைவர் புலித்தேவரை வெற்றிகொள்ள முடியாத வெள்ளையர்கள், மருதநாயகத்தினை பயன்படுத்த திட்டம் தீட்டினர். மருதநாயகத்தின் போர் திறமையைக் கண்ட வெள்ளையர்களும், ஆற்காடு நவாப்பும் அவரை பெரிதும் சிறப்பிக்க பல பதவிகளைக் கொடுத்து இராணுவத்தின் தளபதியாகவும், வரி வசூல் செய்யும் உரிமையையும் கொடுத்தனர். மருதநாயகம் மதுரை கோட்டையிலிருந்து கொண்டு, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை பாளையங்களில் வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்டார். இவருக்கு போர் பயிற்சி கொடுத்து இவரை ஆதரித்தவர் புரூட்டன்.

pulithevar iiiவீட்டில் பணிப் பெண்ணாக இருந்த போச்சுக்கீசியப் பெண்ணான மாசா என்பவரைக் கண்டு, அவர் மீது காதல் கொண்டு அவளுடன் நெருங்கிப் பழகி, அவரை திருமணம் செய்து கொண்டார் மருதநாயகம். திருமணத்திற்குப் பிறகு தான் இவர் நெல்லூர் செல்கிறார். அங்கு இருந்த முகமது கமலிடம் நட்புகொண்டு பின், அங்கு இராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். அந்த இராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்ட மருதநாயகத்தினை முகமது யூசுப்கான் என்று பெயர் மாற்றம் செய்து இஸ்லாமிய மதத்தவராக்குகிறார் முகமது கமல். மருதநாயகம் முகமது யூசுப்கான் என்றாகிறார்.

மதுரையில் இருந்துகொண்டு ஆற்காடு நவாப்புக்கு வரி வசூல் செய்து அனுப்பும் பணியில் இருக்கும் போது, வெள்ளையர்களிடமும் ஆற்காடு நவாப்பிடமும் இவர் நன்மதிப்புப் பெறுவதை விரும்பாத இவரது எதிரிகள் சிலர், இருவருக்கு எதிராக பல வதந்திகளை பரப்பி விடுகின்றனர். முகமது யூசுப்கான் தனி சுதந்திர அரசாக செயல்படுகிறார், ஆற்காடு நவாப்புக்காக வரி வசூல் செய்து அந்த பணத்தினை நவாப்புக்கு அனுப்புவதில்லை, நவாப்புக்கு எதிராக பெரும் படையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று பல வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு இடையில் சிவகங்கை ஜமீன்தார் சரியாக வரி செலுத்தத் தவறியதால் அவருக்கு முகமது யூசுப்கான் தன்னை வந்து சந்திக்குமாறு செய்தி அனுப்புகிறார். அவர் வந்து முகமது யூசுப்கானை சந்திக்கிறார். இருவருக்கும் வரிப் பணத்தில் ஏற்பட்ட பேச்சு வாக்குவாதத்தில் முடிவற்றது. இதனால் கோபம் கொண்ட முகமது யூசுப்கான், சிவகங்கை மீது போர் தொடுத்தார். இந்தப் போர் செய்தியைத் தெரிந்தவுடன், சிவகங்கை ஜமீன் ஜெனரல் தாமோதர் பிள்ளை மற்றும் தாண்டவராயன் பிள்ளை என்பவர்கள் திருச்சி சென்று நவாப்பை சந்தித்து முகமது யூசுப்கான் தங்களுக்கு எதிராக செயல்படுகிறார், சிவகங்கையை போர்தொடுத்து கொள்ளை அடிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார், அவரின் முன்னாள் நண்பர்களான பிரெஞ்சு அரசுடன் தற்போது மிக நெருங்கிய பழக்கம் வைத்திருக்கிறார், பிரெஞ்சு வியாபாரிகளை அதிகம் ஆதரிக்கிறார், அவர்களின் பல பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுகிறார், உங்களுக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டார் என்று குற்றம் சுமத்துகின்றனர்.

இதனை அறிந்த நவாப்பு உடனே முகமது யூசுப்கானை கைது செய்ய உத்தரவிடுகின்றார். ஆற்காடு நவாப்பு படையுடன் வெள்ளையன் படை இணைந்து மதுரை கோட்டையை முற்றுகை இடுகின்றனர். வெள்ளையன் படைத் தளபதி கேம்டெல் என்பவர் செல்லுகிறார். பல நாட்கள் கோட்டையை முற்றுகையிட்ட பின்பு முகமது யூசுப்கானை கைது செய்கின்றனர். ஆற்காட்டு நவாப்பின் முன்பு முகமது யூசுப்கான் நிறுத்தப்படுகிறார். நவாப்பு, ஆங்கிலேயரிடம் இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கின்றார். வெள்ளையனுக்கு முகமது யூசுப்கான் உதவி செய்ததை நினைத்துப் பார்த்து தண்டனை வேண்டாம் மன்னித்து விடுங்கள் என்கின்றனர். ஆனால் நவாப் இவனை தூக்கில் போட்டால்தான் என் கோபம் தீரும், இவனை தூக்கிலிடுங்கள் என்று ஆணை பிறப்பிக்கின்றார்.

வெள்ளையர்கள் முகமது யூசுப்கானை தூக்கு மேடைக்கு அழைத்து செல்லுகின்றனர். தூக்கு கயிற்றைக் கண்டு அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கிறார் முகமது யூசுப்கான். தூக்கிலிடுகின்றனர், பின்னர் இறந்துவிட்டதாக நினைத்து அவரைப் பார்க்கின்றனர், அவர் எழுந்து நிற்கிறார். மீண்டும் அவரை தூக்கிலிடுகின்றனர், இந்த முறையும் அவர் இறக்கவில்லை. பின்னர் மூன்றாவது முறையாக அவரை தூக்கிலிடுகின்றனர். அப்போது அவர் காலில் பீரங்கி இரும்பு வெடிகுண்டுகளை இணைத்து அவரை தூக்கிலிடுகின்றனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிகிறது. மூச்சுக் காற்றை உள் இழுத்து கழுத்து நரம்புகளை வலிமையாக்கும் பல பயிற்சிகளைக் கற்றவர் மருதநாயகம். இவரை தூக்கிலிட்ட இடத்தில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. அது தேனி சாலையில் உள்ள காலவாசல் (Kaalavasal) என்ற இடத்தில், சுங்கவரி பின்புறத்தில் கான் சாகிப் பள்ளிவாசல் என்று இன்று அழைக்கப்படுகிறது. மருதநாயகத்தினை தூக்கிலிட்ட தேதி 15 அக்டோபர் 1764-ஆம் ஆண்டு.

-              வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-6”

அதிகம் படித்தது