முத்திரள் ஆத்திசூடி! (கவிதை)
மகேந்திரன் பெரியசாமிDec 23, 2017
அன்பினால் ஆள்;
அச்சமின்றி இயங்கு;
அகிலத்தை உயர்த்து;
ஆளுமை கூட்டு;
ஆக்கமுடன் இணை;
ஆன்றோர் போற்று;
இன்முகம் காட்டு;
இயன்றவரை உதவு;
இயற்கையோடு இயை;
ஈவதில் மகிழ்;
ஈர நெஞ்சில் இழை;
ஈடுபாடு கொள்;
உள்ள உரம் பெருக்கு;
உயர்வுர எண்ணு;
உலகுக்குப் பயனுறு;
ஊரெல்லாம் சுழல்;
ஊக்கியாய் உணர்;
ஊற்றுபோல் திரள்;
எண்ணியாங்கு எய்து;
எளியவர்க்கு உதவு;
எட்டுதிசை எழுப்பு;
ஏன் என்று வினவு;
ஏடுகள் பல ஓது;
ஏற்றமே விரும்பு;
ஐயங்கள் களை;
ஐம்பொறிகள் வெல்;
ஐக்கியமாய் உணர்;
ஒற்றுமையாய் ஒன்று;
ஒன்றே நாம் என்று உணர்!
ஒவ்வொரு நாளும் உயர்;
ஓயாது ஒளிர்;
ஓட்டத்தைத் தொடர்;
ஓங்கி உயர்ந்து வாழ்!
ஔதாரியம்* தருக;
ஔரவப் பிரகமாய்** வாழற்க;
ஒளருவவிரதி*** நோன்பு கொள்!
எஃகினும் உறுதி கொள்;
வெஃகின்றி**** உயர்!
அஃகா***** செல்வத்தில் திகழ்!
ஔதாரியம்* தருக ~ பெருங்கொடை தருக!
ஔரவப்பிரகமாய்** வாழற்க; ~ ஆட்டு மந்தை போல் வாழற்க
ஒளருவவிரதி*** நோன்பு கொள்! நீர் மட்டும் உட்கொள்ளும் விரதம் கொள்க!
வெஃகின்றி**** உயர்! ~ பிறர் உழைப்பில் இல்லாமல் உங்கள் உழைப்பில் உயர்க!
அஃகா***** செல்வத்தில் திகழ்! ~ குறைவற்ற செல்வத்தில் திகழ்!
மகேந்திரன் பெரியசாமி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முத்திரள் ஆத்திசூடி! (கவிதை)”