முள் நீங்கிய பறவை, நம் தொடர்பு (கவிதைகள்)
தொகுப்புFeb 21, 2015
முள் நீங்கிய பறவை
எழுதியவர்: கணேசகுமாரன்
செல்லரித்த புகைப்படத்தை
பத்திரப்படுத்தியிருக்கும் இரும்புப் பெட்டிக்குள்
ஓர் இறந்தகாலம்
இறக்காமல் இருக்கிறது எப்போதும்.
—————————————————————————————————————————————————————
நம் தொடர்பு
எழுதியவர்: சுடர்
தொலைத்தொடர்பு வலைத்தொடர்பு மனிதகுல உச்சம்
தொண்டாற்றும் மனங்களெல்லாம் தொகுப்பாக வேண்டும்
தொலைவளர்ந்தோம் ஒளியாண்டில் நாமுள்ளோம் அருகில்
தொலைத்தொடர்பை விரும்புதற்போல் முகம்கண்டு மகிழ்வோம்
தொலைகடந்தோம் பொருள்விற்றோம் கற்றுணர்த்தி வாழ்ந்தோம்
தொண்டாற்ற மனம்விரிய சித்தநெறி நிற்போம்
தொலைக்கவில்லை மறைந்துள்ள(து) என்றெண்ணித் தேடி
தொகுத்துணர்ந்து பகுத்துணர்ந்து தூயவழி காண்போம்
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முள் நீங்கிய பறவை, நம் தொடர்பு (கவிதைகள்)”