சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூக்கடைப்பு நீங்க வழிமுறைகள்

சிறகு சிறப்பு நிருபர்

Jan 9, 2016

mookkadaippu1

 • புதினா இலைச்சாற்றில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 • சுக்கை ஒரு கோப்பை நீரில் சேர்த்து, தண்ணீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க வைத்து, பின் அதில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால், மூக்கடைப்பு வருவது தடுக்கப்படும்.
 • சிறிதளவு நெல்லிக்காய் பொடி மற்றும் கடுக்காய் பொடியை தேனுடன் கலந்து தினமும் காலைசாப்பிட்டால் மூக்கடைப்பு குணமாகும்.
 • புதிய ரோஜா மலரை முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 • சிறிது இலவங்கப்பட்டைத் தூளை நீர் விட்டு குழைத்து உச்சந்தலையில்தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 • மஞ்சள் தூளை இரண்டு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு நீங்கும். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்தும் சாப்பிடலாம்.
 • நொச்சி இலைகளை அரைத்து எடுத்த சாறுடன், நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்றி, பின் அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 • மா இலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
 • மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும்போது, சுடுநீர் குளியலை மேற்கொண்டால் உடனே மூக்கடைப்பு நீங்கிவிடும்.
 • மூக்கடைப்பு இருக்கும் பொழுது ஆவிபிடித்தால் உடனே மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.
 • நறுக்கிய வெங்காயத்தை நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும், அல்லது வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டாலும் மூக்கடைப்பு விடுபடும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூக்கடைப்பு நீங்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது