மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மெரினாவில் நடந்த வன்முறையை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்



Feb 1, 2017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். அமைதியாக நடைபெற்ற போராட்டம், போராட்ட இறுதி நாளில் வன்முறை ஏற்பட்டது.

Siragu chennai highcourt

இந்த வன்முறையில் பெண்கள், முதியவர்கள் என பலரும் காயமடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை நீதிபதியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விசாரணையின் அறிக்கை மூன்று மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெரினா மட்டுமன்றி, கோவை மற்றும் மதுரை போன்ற இடங்களிலும் நடைபெற்ற வன்முறை குறித்தும் இக்குழு விசாரணை நடத்த உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மெரினாவில் நடந்த வன்முறையை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்”

அதிகம் படித்தது