ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மேற்குவங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூன்று வீரர்கள் பலிNov 30, 2016

மேற்குவங்க மாநிலத்தின் சுக்னா என்ற இடத்தில் நான்கு இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற சீட்டா என்ற ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர்.

siragu-army_helicopter

இதில் பயணித்த மூன்று உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்த ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், இந்த சீட்டா வகை ஹெலிகாப்டர்கள் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களிலும் அதிக உயரத்திலும் பறக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேற்குவங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூன்று வீரர்கள் பலி”

அதிகம் படித்தது