யாருடைய பூமி? (கவிதை)
ராஜ் குணநாயகம்Feb 12, 2022
இந்த பூமி
ஒரு தனி மனிதனுக்கோ;
ஒரு இனத்துக்கோ;
ஒரு தேசத்துக்கோ
சொந்தமானதோ?
மனித இனமும்
மனிதன் பாகுபடுத்திக்கொண்ட
பல மனித இனங்களும்
கோடானுகோடி உயிரனங்களும்
இங்குதானே பிறப்பெடுத்தன
இங்குதானே வாழவேண்டும்!
இங்கு
ஓர் உயிரின்
சுதந்திர வாழ்வை
மறுக்கும் கூட்டம்
வேறெங்கு போய் வாழ முடியும்
என்பதையும்
இனி கூறட்டும்!
இல்லையேல்
அந்த கூட்டம்தான்
திங்களிலோ
செவ்வாயிலோ
புதனிலோ
வியாழனிலோ
வெள்ளியிலோ
சனியிலோ
இல்லை
ஞாயிறிலோ,
வேறோர் கிரகத்திலோ
போய் குடியேறவேண்டும்
முடிந்தால்.
முடியாவிட்டால்
நாவடக்கி
எல்லோரோடும் சேர்ந்து வாழ பழகட்டும்!
உனக்கும்
எனக்கும்
எல்லா உயிரினங்களுக்கும்
இருப்பதோ
ஒரே பூமிதான்.
ஈழன்
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “யாருடைய பூமி? (கவிதை)”