ஜூலை 11, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

யார் இங்கே குற்றவாளிகள்!(கவிதை)

ராஜ் குணநாயகம்

Jun 24, 2017

Siragu election

 

வாக்கு போட்டு நொந்தவர்களா
வாக்கு கேட்டு வந்தவர்களா….?

நீதி குற்றவாளிக்கூண்டில்
அநீதியின் விசாரணையில்…..
ஊழலின் ஊழிக்கூத்துத்தாண்டவம்
தன் தலையில் தாமே
மண் அள்ளி போடும்
தமிழ் தேசிய போலிகள்!

அரசியல்
இவர்களுக்கு வியாபாரம்
அரசியல் சாணக்கியம்
தவழும் குழந்தை
கொள்கை
அப்படியொன்றுமில்லை
கொள்கை பற்று
கொள்கையேயில்லை
தமிழ் தேசியம்
இவர்களின் மாய மந்திரக்கோல்
நீண்ட கால தந்திரோபாய திட்டம்
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது
சுயநலம்,ஊழல்,சூழ்ச்சி
இவர்கள் தாரக மந்திரம்
பணம்,பதவி,பட்டம்
இவர்கள் தணியாத மோகம்
மக்கள் நலன்
தேர்தல் கால விளம்பரங்களுக்கு மட்டும்
வாக்கு போட்ட மக்கள்
தேர்தலின் பின் செல்லாக்காசுகள்
துணிச்சல்,நேர்மை,இனப்பற்று
இவர்கள் அகராதியிலேயே இல்லை
நிர்வாகம்
ஆமை வேகம்,குரங்குகள் கையில் பூமாலை

வாக்கு கேட்டு வரும்
இந்த தமிழ் தேசிய போலிகள் குற்றவாளிகளா…?

மீண்டும் மீண்டும்
வாக்குபோட்டு
அரியணையில் ஏற்றி
பின்னே
சிங்கங்களுக்கு பதிலாய்
அசிங்கங்கள் அரியணையில் என்று
ஒப்பாரி வைக்கும்
மக்கள் நாம் குற்றவாளிகளா?

சனநாயக சித்தாந்தத்தில்
அதிகார மையம் மக்களே……….!

-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “யார் இங்கே குற்றவாளிகள்!(கவிதை)”

அதிகம் படித்தது