ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ரயில்வே துறை: பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் இனி வீடு தேடி வரும்May 10, 2017

இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்கப்படுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. தற்சமயம் ரயில்வே டிக்கெட்டை புக் செய்வோர்க்கு ரயில் டிக்கெட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் திட்டத்தை தொடங்கவுள்ளது மத்திய அரசு.

Siragu railway2

அவ்வகையில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஐஆர்சிடிசி செயலி மூலமாகவோ ரயில்வே டிக்கெட்டை பதிவு செய்வோர்க்கு ரயில் டிக்கெட் வீட்டிகே அனுப்பி வைக்கப்படும். ஐஆர்சிடிசி-யில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண் அல்லது பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

ஐந்தாயிரம் ரூபாய் வரை டிக்கெட் பெறுவோருக்கு சேவை கட்டணமாக ரூ.90ம், ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்வோருக்கு சேவை கட்டணமாக ரூ. 120 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்டை டெலிவரி செய்வதற்கு முன்பு ரத்து செய்துவிட்டால் அதற்கான விநியோகக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரயில்வே துறை: பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் இனி வீடு தேடி வரும்”

அதிகம் படித்தது