மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ராணுவத்தை நவீனப்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கைMay 18, 2017

ரூ.22ஆயிரம் கோடி ரூபாயில் ராணுவத்தை நவீனப்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பீரங்கிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

Siragu army

மேலும் ஐந்து வகையான பீரங்கிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய ராணுவம். போபோர்ஸ் பீரங்கி ஊழல் நடைபெற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின் எம்-777 அதிவேக பீரங்கிகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது.

இது அமெரிக்க டாலர் மதிப்பில் 700 மில்லயன் மதிப்பில் 145 பீரங்கி துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளது. இது முப்பது கிலோ மீட்டர் தூரம் வரை தாக்குதல் நடத்த ஏற்றவை. இப்பீரங்கிகள் விமானம் மூலம் ராஜஸ்தானின் போக்ரான் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராணுவத்தை நவீனப்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை”

அதிகம் படித்தது