மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ராமநாதபுரத்தில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சிMar 3, 2017

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Siragu rain

இந்நிலையில் தென் கடலோர பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதேபோல் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதுகுளத்தூர், கமுதி ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் மழை பெய்தாலும், கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராமநாதபுரத்தில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி”

அதிகம் படித்தது