டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: ஏ.டி.எம்- களில் 01.01.2017 முதல் ரூ.4500 எடுக்கலாம்Dec 31, 2016

கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 30 என அறிவிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பதில் பல்வேறு காட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.

siragu-atm

மேலும் மார்ச் 31 வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே செலுத்தலாம் எனவும், அதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுடன்(30.12.2016) இதற்கான காலக்கெடு முடிவடைந்தது. இதுவரை ஏ.டி.எம்-களில் ஒரு நாளுக்கு ரூ.2500 எடுத்திருந்த நிலையில், நாளை முதல் ஏ.டி.எம்- களில் 4500 ரூபாய் எடுக்கலாம் என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: ஏ.டி.எம்- களில் 01.01.2017 முதல் ரூ.4500 எடுக்கலாம்”

அதிகம் படித்தது