டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: செல்லாத நோட்டுக்கள் ரூ.5000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்Dec 19, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். ரிசர்வ் வங்கி இதில் புதிய புதிய கட்டுப்பாடுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

A man deposits his money in a bank in Amritsar

இந்நிலையில் இன்று வங்கியில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை 5000 ரூபாய் வரை மட்டும்தான் டெபாசிட் செய்யவேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளயாக்குவதைத் தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே டிசம்பர் 30க்குள் ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை பயன்படுத்தி ஐந்தாயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: செல்லாத நோட்டுக்கள் ரூ.5000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்”

அதிகம் படித்தது