அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம்Jan 4, 2017

கடந்த நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இதன் பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் சில்லரைத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

siragu-ten-rupee-coin

இதனால் 2010 மற்றும் 2015 ம் ஆண்டு அச்சிடப்பட்ட 10ரூபாய் நாணயங்களை அதிக அளவு புழக்கத்தில் விட்டுள்ளனர். இதில் 2010ல் தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக பேருந்துகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மக்களிடமிருந்து இந்த நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் போலி 10ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் எழுந்ததன் பெயரில் விசாரணை நடத்தினோம். 2010ல் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள், 2011ல் வெளியிடப்பட்டது. 2015ல் வெளியிடபட்ட 10 ரூபாய் நாணயங்களில் ரூபாய் சின்னமும் சேர்த்து வித்தியாசமான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருட நாணயங்களும் செல்லும், புரளியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. போலி நாணயத்துடன் வங்கியை அணுகுபவர்கள் அந்த நாணயங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அதற்கு ஒரு சான்றிதழை அளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம்”

அதிகம் படித்தது