ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரத்தினால் அரிசி விலை உயர்வுNov 30, 2016

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் நெல் சாகுபடி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து நெல் கொண்டுவரப்பட்டு ஆலைகளில் அரைத்து அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

siragu-_rice

இச்சூழலில் செல்லாத நோட்டு அறிவிப்பினால் நெல் மூட்டைகளுக்கு கொடுக்க பணம் இல்லை, தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை போன்ற பிரச்சனைகளால் ஆலைகள் மூடிக்கிடக்கிறது. இதனால் கையிருப்பில் உள்ள அரிசியை விற்றுவருவதால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

ரூ. 26க்கு விற்ற மோட்டார் ரக அரசி, தற்போது ரூ.32க்கும், ரூ. 45முதல் 50வரை விற்ற பொன்னி அரிசி, தற்போது ரூ. 55 முதல் ரூ. 60க்கும் விற்கப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரத்தினால் அரிசி விலை உயர்வு”

அதிகம் படித்தது