மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரம்: தமிழகத்தில் நாளை மறுநாள் கடையடைப்பு



Nov 26, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றதிலிருந்து மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் புரசைவாக்கத்தில் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் கே.தேவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

siragu-rupees1

இக்கூட்டத்தில் செல்லாத நோட்டுக்களால் சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, முடிவில் மோடியின் அறிவிப்பு உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்கும்படியாக உள்ளது என்றும், மேலும் ஆன்லைன் வர்த்தகத்தை நோக்கி மக்களை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளதால் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் திங்கட்கிழமை கடையடைப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பார்கள் என்று வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரம்: தமிழகத்தில் நாளை மறுநாள் கடையடைப்பு”

அதிகம் படித்தது