ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்ட பருப்பு, பாமாயில் நிறுத்தம்
Mar 2, 2017
தமிழக நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வந்தனர்.
2015-16 நிதி ஆண்டில் சிறப்பு பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.1158 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2016-17 நிதி ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்த நிதி ஒதுக்கவில்லை என்று தெரிய வருகிறது.
இதன் காரணமாக பருப்பு மற்றும் பாமாயிலை நியாய விலைக் கடைகளில் வினியோகிப்பது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்ட பருப்பு, பாமாயில் நிறுத்தம்”