ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழைNov 30, 2016

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் புயலாக மாறி சென்னை மற்றும் வேதாரண்யம் அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது.

siragu-rain

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 2,3 தேதிகளில் புயலாக மாறி சென்னை மற்றும் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து சென்னை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழை”

அதிகம் படித்தது