சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புDec 17, 2016

அண்மையில் அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறியது. வர்தா என பெயரிடப்பட்ட இப்புயல் சென்ற 12ம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது.

siragu-rain

இப்புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சேதமாகின. 3000மின் கம்பங்கள், ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடையுமா என நாளை(18.12.16) தெரியும் எனவும் அறிவித்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு”

அதிகம் படித்தது