ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வர்தா புயல் ஓய்ந்த பின்னும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் இணைப்புகள் சீராகவில்லைDec 15, 2016

சென்ற திங்கட்கிழமை(12.12.2016) வர்தா புயல் சென்னைக்கு மிக அருகே கரையைக் கடந்தது. இப்புயலால் திங்கட்கிழமை அன்றே முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் இப்புயலால் அதிக சேதம் ஏற்பட்டது.

siragu-storm

இப்புயலினால் மின்கம்பங்கள் பல சாய்ந்தன. அதனால் மக்கள் இருளில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் 90 சதவிகிதம் மின் இணைப்பு சீர்பட்ட நிலையில் இன்னும் புறநகர் பகுதியில் சீர் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இப்புயல் ஓய்ந்த பின்னும் இன்னும் அநேக இடங்களில் மின்சார இணைப்பு கிடைக்காமல் இருப்பதற்கு போதிய ஊழியர்களும், உபகரணங்களும் இல்லாததுதான் இந்நிலைக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வர்தா புயல் ஓய்ந்த பின்னும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் இணைப்புகள் சீராகவில்லை”

அதிகம் படித்தது