ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

‘வர்தா’ புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார் தமிழக முதல்வர்Dec 19, 2016

டிசம்பர் 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து சென்ற டிசம்பர் 12ம் தேதி ‘வர்தா’ புயர் சென்னையைத் தாக்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தது.

siragu-modi-and-o-p-s

இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்து 184 பக்கங்கள் அடங்கிய மனுவை மோடியிடம் அளித்தார்.

அம்மனுவில் 22,500 கோடி ரூபாயை புயல் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “‘வர்தா’ புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார் தமிழக முதல்வர்”

அதிகம் படித்தது