மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்Mar 14, 2017

வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

siragu-farmers

ஆர்ப்பாட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் தங்கள் கைகளில் மண்டை ஓடு மற்றும் மண் சட்டியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். விவசாயிகளுக்கு பென்ஷன் தொகையாக ஐந்தாயிரம் ரூபாயை மாதம் தோறும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் 100 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது