அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசுJan 3, 2017

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரி நீர் கிடைக்காததாலும் காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

siragu-panneerselvam2

இந்நிலையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது தமிழக அரசு. மேலும் ஜனவரி 9ம் தேதி வரை வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து ஜனவரி 10ம் தேதி தமிழக அரசுக்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

வரும் அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், பயிர்க் காப்பீட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு”

அதிகம் படித்தது