வானவில் (கவிதை)
குமரகுரு அன்புJul 16, 2022
வானவில்லின் இரு முனையிலும்
இரு சிறுவர்கள்
ஒருவன் குனிந்தபடி
குளத்தில் வாரவில்லின்
பிம்பத்தைப் பார்க்கிறான்
இன்னொருவன் உயரமான கண்ணாடி
கட்டடத்தில் வானவில்லின்
பிம்பத்தைப் பார்க்கிறான்
வானவில் மேகத்திலிருந்து
சோகமாய் இருக்கிறது
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
திண்ணைக் கிழவியின்
அழுகையுடன்!!
குமரகுரு அன்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானவில் (கவிதை)”