மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழைMar 1, 2017

வருடந்தோறும் மார்ச் மாதம் முதல் வெப்பம் அதிகமாகக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Siragu rain

சென்னையில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை”

அதிகம் படித்தது