வானிலை ஆய்வு மையம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை
May 8, 2017
தமிழகத்தில் கோடை காலத்தின் தாக்கம் மார்ச் மாதத்திலிருந்தே ஆரம்பித்து அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போது அக்னிநட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதிய வேளையில் வெப்பக்காற்று வீசி வருகிறது. மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை”