ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் கோடைமழை நீடிக்கும்May 13, 2017

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Siragu meteorological

இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை இடியுடன் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 9 செ.மீ மழையும், நாங்குநேரியில் 5செ.மீ மழையும், வால்பாறையில் 4செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும்அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் கோடைமழை நீடிக்கும்”

அதிகம் படித்தது