மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை மையம் எச்சரிக்கை: சென்னையில் அனல் காற்றுMay 18, 2017

தமிழகத்தில் மார்ச் மாதத் துவக்கத்திலிருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அநேக இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. எனவே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Siragu Sunlight

அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்கூறியுள்ளார் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

இந்நிலையில் இன்று(18.05.17) பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை சென்னையில் அனல் காற்று வீசும் என்றும், அதனால் இந்நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று காலையிலேயே 38 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை மையம் எச்சரிக்கை: சென்னையில் அனல் காற்று”

அதிகம் படித்தது