செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை மையம்: வெப்பத்தின் தாக்கம் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும்May 20, 2017

தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பிக்க இருக்கும் முன்பே வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது. மார்ச் மாதமே துவங்கிய வெப்பத்தின் தாக்கம் அக்னி நட்சத்திரம் துவங்கியதும் மேலும் அதிகரித்துள்ளது.

Siragu meteorological

தமிழகத்தில் அனல் காற்று வீசி வருகிறது. தமிழகத்தின் பல இடங்கள் நூறு டிகிரி வெப்பநிலையைத் தாண்டியுள்ளது. திருத்தணியில் அதிகபட்சமாக 115 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஆந்திரா பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி வெப்பக்காற்று வீசி வருவதால் தமிழகத்தில் வெப்பக்காற்று வீசுகிறது.

இந்த நிலை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை மையம்: வெப்பத்தின் தாக்கம் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும்”

அதிகம் படித்தது