ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

வாழிய எம்தமிழ்ச் சமுதாயம் (கவிதை)

இல. பிரகாசம்

Jul 15, 2017

tamil-mozhi-fi

வாழிய வாழியவே! –தமிழ்மக்கள்
நீடூழி வாழிய வாழியவே!

சீராளும் புகழ்வைய மீதிலே –தமிழ்ச்
சீரர்பெற்று வாழிய வாழியவே!
காவிரிப் பொய்கை புகழ்போல –தமிழ்
காக்கும் அடியோர் நல்புகழ் வாழியவே!
(வாழிய வாழியவே)
திராவிட தேசிய கீத மெங்கும்
பொங்கொலி சங்க நாதத்தோடு –எங்கும்
மங்கல நாதமாக எங்குமிசைத் திடுகவே!
(வாழிய வாழியவே)
அரும்பெரும் நல்லோர் ஆண்ட திருக்குறளின்
அறப்பொருள் விளங்க –எல்லோரும்
வாழ்வினில் நலம்பெற்று வாழியவே!
(வாழிய வாழியவே)
எம்மத்தின் குற்றமும் இன்றித் தனித்த
ஏரார்ந்த புகழ்தமிழ்ச் சமுதாயம் -நாளும்
நீடூழி வாழிய வாழியவே!
(வாழிய வாழியவே)


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழிய எம்தமிழ்ச் சமுதாயம் (கவிதை)”

அதிகம் படித்தது