வாழும் சுதந்திரம்! (கவிதை)
ராஜ் குணநாயகம்Jan 29, 2022
அவை அவை
சுதந்திரமாய்
அவைகளாகவே இருந்துவிடட்டும்!
பறவைகளின் வாழ்வு
மரங்களில்,கூடுகளில்
பறந்த திரிவதிலும்
மீன்களின் வாழ்வு
நீரில்
மண்புழுவின் வாழ்வு
மண்ணோடு.
இயற்கையின் ஒவ்வொரு படைப்பும்
சுதந்திரமானவை
தனிமனிதனும்தான்.
இயற்கையின் உயிர் கொண்ட ஓர் படைப்பை
உயிர் கொண்ட இன்னோர் படைப்பு
அடக்குதல்
ஆளுதல்
அழித்தல்
எனும் சுதந்திரமும்
வன்முறையே..
அதுவே
கடவுளின் பெயரால்
நடந்தால் கூட.
சிற்றெறும்புக்கும்
சிறு புழுவுக்கும்
பட்டாம்பூச்சிக்கும் கூட
வாழ்வு உண்டல்லோ.
அவரவர்
அவரவராகவே வாழட்டுமே
விட்டுவிடுங்கள்!
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழும் சுதந்திரம்! (கவிதை)”