வாழ்க்கையும்…(கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிJul 3, 2021
தோல்வியின் சருகெடுத்து
நெருப்பிட்டு பொசுக்குவோம்;
தீயில் எழும் புகையை பிடித்தெடுத்து
முகிலின் தோட்டத்திற்கு அனுப்பி
நீரின் சூலை ஏந்திடச் செய்வோம்;
ஒவ்வொரு தோல்வியும்
சூல் கொள்கிறது
வெற்றித் தடங்களை;
தடங்களின் கனம் அதிகமானால்
மழையாய் பொழியும் தரை தொட்டு;
துளிகள் மீண்டு செல்லும் முகில் கூட்டத்திடம்;
நீரின் வட்டச் சக்கரம் போலவே
தொடர்ந்து கொண்டே இருக்கும்
நீண்டுகொண்டே இருக்கும்
பொழிந்து கொண்டே இருக்கும்
வாழ்க்கையும்…
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழ்க்கையும்…(கவிதை)”