மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் பகுதி 5

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 26, 2022

siragu vischithra valzhakku1

2018 ஆம் ஆண்டு 69 வயதான எமில் ரெட்டெல்பேண்ட் (எமிலி ரெல்பந்தி) தன் வயதை 20 ஆண்டுகள் சட்டப்படி குறைத்து சான்றிதழ் வழங்குமாறு நீதிமன்றத்தை அணுகினார். அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.

அதற்கான காரணங்களாக அவர் கூறியவை: மருத்துவர்கள் “நான் உடல் ரீதியாக இளமையாக உள்ளேன் எனக் கூறினார், அதனால் அதனைச் சான்றிதழில் மாற்றம் செய்தால் தனக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்” என்றார். இதனால் அவரின் ஓய்வூதியம் தாமதப்படுத்தப்படும் என்ற போதிலும் அதைப்பற்றி தனக்குக் கவலை இல்லை என்று நீதிமன்றத்தில் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்புச் சான்றிதழில் தங்கள் பாலை மாற்றும் உரிமை மாற்றுப்பாலினத்தவர்க்கே உண்டு என்றும் அதுவும் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே சாத்தியப்பட்டது என்றும் கூறினார்.

மேலும் எமில் தன் வயது 49ஆகச் சான்றிதழில் மாற்றப்படும்போது தனக்கு வீடு வாங்கவும், வாகனம் வாங்கவும் வங்கியில் கடன் வாங்கவும் எளிதாக முடியும் என்றார். மேலும் பல வேலைகளில் தனக்கு முன்னுரிமை கிடைக்கும், டின்டர் போன்ற டேட்டிங் வலைத்தளங்களில் தனக்கு துணையும் கிடைப்பார்கள் என்றும் கூறினார்.

அய்ரோப்பா சுதந்திர சிந்தனைகள் கொண்ட நாடு ஆதலால் இது போன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 5”

அதிகம் படித்தது